பங்குனி உத்திர உற்சவ பூக்குழி திருவிழா

மதுரை மேலூர் அருகே பூக்குழி திருவிழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு சேகரம், முனியாண்டிபட்டி, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம் மண்டபம் ஆகிய ஊர் அம்பல இளைஞர்களுக்கு சொந்தமான அருள்மிகு ஶ்ரீ பழனி ஆண்டவர் ஆலயத்தின் பங்குனி உத்திரம் உற்சவ விழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள், இளைஞர்கள் 15 நாட்கள் காப்புகட்டி கடுமையான விரதம் இருந்து வந்தனர். நேற்று (ஏப்.11)கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அம்பலகாரர் மற்றும் அம்பல இளைஞர்கள் முனியாண்டிபட்டி, சின்னசூரக்குண்டு, நாகலிங்கம்புரம், மண்டபம் ஆகிய கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story