அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம்

மதுரை மேலூர் அருகே அதிமுகவினரின் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மாபெரும் திண்ணைப் பிரச்சாரம் கருங்காலக்குடியில் நேற்று (ஏப்.11) நடைபெற்றது. கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் யூனியன் சேர்மன் பி.வெற்றிச்செழியன் தலைமை தாங்கினார். மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும்,மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளருமான பி.பெரியபுள்ளான் (எ)செல்வம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ கே.தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட அவை தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜபார், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் யூனியன் வைஸ் சேர்மன் குலோத்துங்கன், மேலூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் யூனியன் சேர்மன் கே.பொன்னுச்சாமி, மேலூர் வடக்கு ஒன்றிய கழகசெயலாளர் கே.சி.பொன் ராஜேந்திரன், அ. வல்லாளபட்டி பேரூர் கழக செயலாளர் ஏ.கே.உமாபதி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேக்கிபட்டி சாகுல் ஹமீது உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story