குமரி : விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி

X
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விபத்தில்லா குமரி மாவட்டம் என்ற குறிக்கோளுடன் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு முதல் மூன்று மாதத்தில் நடந்த விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் முற்றிலுமாக விபத்துக்கள் நடைபெறாத வண்ணம் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பாதுகாப்பான வாகனம் ஓட்டுதல் , பாதசாரிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட சாலை பாதுகாப்பு கருப்பொருள்களில் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ரீல்ஸ் போட்டியை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை நடத்துகிறது. இளைஞர்கள் இலக்கு: ரீல்ஸ் இல் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இந்தப் போட்டி நோக்கமாகக் கொண்டது. வயது வரம்பு: வயது வரம்பு இல்லை. எந்த வயதினர் வேண்டுமென்றாலும் இந்த ரீல்ஸ் போட்டியில் கலந்து கொள்ளலாம். பரிசு: முதல் பரிசு: 10000 ரூபாய் இரண்டாம் பரிசு : 7000 ரூபாய் மூன்றாம் பரிசு : 5000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு மற்றும் தொடர்புக்கு: இந்த ரீல்ஸ் போட்டி சம்பந்தமாக பதிவு செய்தல் மற்றும் சந்தேகங்களுக்கு 7397 616 301 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கடைசி நாள்: 30.04.25 தேதிக்குள் ரீல்ஸ் [email protected] என்ற மெயிலில் அனுப்பவேண்டும். ஆர்வம் உள்ளவர்கள் ரீல்ஸ் எடுத்து மாவட்ட காவல் துறையுடன் இணைந்து விழிப்புணர்வில் பங்கெடுத்து விபத்தில்லா குமரி மாவட்டத்தை உருவாக்க மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story

