பழங்குடியின மீனவர்களுக்கு ஆட்சியர் தகவல்

பழங்குடியின மீனவர்களுக்கு ஆட்சியர் தகவல்
X
தகவல்
மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு, 90 சதவீத அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய மீன் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைத்தல், உள்ளீட்டு மானியம் வழங்குதல், பயோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு, நீரின் மறுசுழற்சி முறை மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.மேலும் மீன்விற்பனை திட்டங்களான குளிர் காப்பு வாகனம், ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு, 90 சதவீத அரசு மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் பயனடைய விரும்பும் பழங்குடியின மீன் வளர்ப்பு விவசாயிகள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நெ.62/56ஏ, தாட்கோ அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம்- - 605 602 என்ற அலுவலகத்தில் நேரிலும், 04146 - 259329 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story