பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை.

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டியைச் சேர்ந்த மொக்கராஜ் மகன் தேவகுமார் (35) என்பவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.10) இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாலாந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

