ரேஷன் கார்டுதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் - ஆட்சியர்

ரேஷன் கார்டுதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் - ஆட்சியர்
X
ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில், 46,339 அந்தியோதயா அன்ன யோஜன (AAY) அட்டைதாரர்கள் உள்ளனர். இக்குடும்ப அட்டைதாரரர்களின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 1,62,838 ஆகும். அதில், அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரரர்களின் குடும்ப உறுப்பினர்களில் 1,32,495 நபர்களின் விரல்ரேகை விபரங்கள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, 1,91,710 முன்னுரிமையுள்ள குடும்ப அட்டைதாரர்கள் (PHH) உள்ளனர். இக்குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 5,98,433 ஆகும். அதில், முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களின் (PHH) குடும்ப உறுப்பினர்களில் 4.84,209 நபர்களின் விரல்ரேகை விபரங்கள் மட்டுமே. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் NFSA (AAY/PHH) 7.61.271 குடும்ப அட்டைதாரர்களின், 1,44,567 குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை பதிவு செய்யபடவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும். AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நியாய விலைக்கடைகளில் வருகின்ற 30.04.2025-(e-KYC) தேதிக்குள் விரல்ரேகை பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story