காசநோய் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்

X
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற உலக காசநோய் தின அனுசரிப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காசநோய் சிகிச்சை அளிப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) தர்மர், துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்) வெள்ளசாமி, மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன் உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story

