தனியார் நிலத்தில் மண எடுக்க அனுமதி வழங்க கூடாது பொதுமக்கள் வலியுறுத்தல்

தனியார் நிலத்தில் மண எடுக்க அனுமதி வழங்க கூடாது பொதுமக்கள் வலியுறுத்தல்
X
காங்கேயம் அருகே தனியார் நிலத்தில் மண எடுக்க அனுமதி வழங்க கூடாது பொதுமக்கள் தாராபுரம் கோட்டாட்சியரிடம் வலியுறுத்தல்
தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம் காங்கேயம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியி ருப்பதாவது:- காங்கேயம் அருகே உள்ள ஆறுதொழுவு கிராமத்தில் பட்டா நிலத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக மண் எடுக்க 6 மாதங்களுக்கு அனுமதி கோரி தனியார் நிறுவனத்தினர் மனு செய்துள்ளதாக தெரிய வருகிறது. கிராவல் மண் எடுக்க அனுமதி கேட்கும் பகுதி பொன்னாளிபாளையம், காளிபாளையம் மற்றும் அவினாசி பாளையம் புதூர் பகுதிகளுக்கு மத்தியில் உள்ளது. இப்பகுதியில் முக்கிய வாழ்வாதாரமாக கால்நடைகள் மேய்த்தலும், மாடுகள் வைத்து பால் உற்பத்தி மற்றும் விவசாயம் செய்து வருகிறோம். இப்பகுதியில் கிராவல் மண் எடுக்க அனுமதி கொடுத்தால் விவசாயம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். கிராவல் மண் எடுக்க அனுமதி கொடுத்தால் ஊராட்சி சாலைகள் மிகவும் பெருத்த சேதம் அடையும், மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும். ஆடு மாடுகளை சாலையில் ஓட்டிச் செல்ல முடியாத சூழ்நிலை நிலவும். எனவே இந்த பகுதியில் கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது.
Next Story