திரேஸ்புரம் கடற்கரையில் மீன்களின் விலை உயர்வு
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதிய நிலையில் மீன்களின் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயர்வு சீலா மீன் கிலோ 1300 ரூபாய் வரையும் விளைமின், ஊழி, பாறை, ஆகிய வகை மீன்கள் கிலோ 600 ரூபாய் வரையும் நண்டு ஒரு கிலோ 500 ரூபாய் வரையும் விற்பனையானது தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் ஏற்கனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் கரை திரும்பின இந்த படகுகளில் மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொது மக்களின் கூட்டம் அலைமோதியது மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது சீலா மீன்கள் ஒரு கிலோ 1300 ரூபாய் வரையும் விலை மீன் ,ஊழி, பாறை ஆகிய மீன்கள் கிலோ 500 முதல் 600 ரூபாய் வரையும் நண்டு ஒரு கிலோ 500 ரூபாய் வரையும் கிழ வாளை ஒரு கிலோ 300 ரூபாய் வரையும் விற்பனையானது இதேபோன்று ஏற்றுமதி ரக மீன்களான பண்டாரி கிலோ 1000 முதல் 1300 ரூபாய் வரையும் பூனைக்கண்ணி கிலோ எழநூறு ரூபாய் வரையும் தம்பா கிலோ 500 ரூபாய் வரையும் விற்பனையானது மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இதே போன்று விலையை பொறுப்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றனர்
Next Story



