திருவேங்கடம் அருகே வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

X
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே சங்குபட்டி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் வேல்முருகன்(24) இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

