உணவு அருந்தும் கூடத்தினை திறந்து வைத்த அமைச்சர்

X

திருப்பத்தூர் அருகே உணவு அருந்தும் கூடத்தினை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றியம், இளங்குடி ஊராட்சி கருகுடி கிராமத்தில் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.06.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவு அருந்தும் கூடத்தினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story