கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
X
நகரம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், நகரம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தில் பெரிய மாடு 6 ஜோடிகளும், சிறிய மாடு 10 ஜோடிகளும் என மொத்தம் 16 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சொக்கநாதபுரம் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்லைப் பந்தயத்தில், பெரிய மாட்டுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன. இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளருக்கும், சாரதிக்கும் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த பந்தயத்தை மதகுபட்டி, நகரம்பட்டி, பாகனேரி, சொக்கநாதபுரம், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டு ரசித்தனா்.
Next Story