திருப்பத்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்

திருப்பத்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்
X
திருப்பத்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் மக்கள் அவதியடைந்துள்ளனர்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில் வீரபத்திரன் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு காவிரி குடிநீர் திட்டத்தில் ஒரு நாள் இடைவெளியில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக நுரையுடன் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் தண்ணீரை ஒரு குடம் ரூ.15-க்கு வாங்கி பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Next Story