காளையார்கோவிலில் தொன்மையான பாசி மணிகள் கண்டெடுப்பு

காளையார்கோவிலில் தொன்மையான பாசி மணிகள் கண்டெடுப்பு
X
காளையார்கோவிலில் பழைமையான பளிங்கு பாசிமணி கண்டெடுக்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் பாண்டியன் கோட்டையில் சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பழமையான பளிங்கு பாசி மணி, செம்பு கைப்பிடியுடன் கூடிய இரும்பாலான பொருள் கண்டெடுக்கப்பட்டன.இது குறித்து புலவர் கா.காளிராசா கூறியதாவது: காளையார்கோவிலில் 37 ஏக்கரில் பழமையான பாண்டியன் கோட்டை மண்மேடாக உள்ளது. அதைச் சுற்றி அகழி, நடுப்பகுதியில் நீராவிக்குளம் ஆகியவை அமைந்துள்ளன. அதன் கிழக்குப் பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோயில், தெற்குப் பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் ஆகியவை உள்ளன. அக்கோயில்களை மக்கள் வழிபட்டு வருகின்றனர். 4 ஆண்டுகளுக்கு முன், பாண்டியன் கோட்டை மேடு பகுதியில் கால்வாய் தோண்டியபோது பழமையான சங்க காலச் செங்கல் எச்சங்கள், துளையிட்ட ஓடுகள், வட்டச் சில்லுகள், எடைக் கற்கள், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், எலும்பால் ஆன கருவி முனைகள், தமிழி குறியீடுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. தற்போது பளிங்கு பாசிமணி, அது வட்ட வடிவில் துளையிடப்பட்டு இருந்தது. மேலும் செம்பு கைப்பிடியுடன் கூடிய இரும்புப் பொருள் கண்டெடுக்கப் பட்டது. அது கத்தி அல்லது குறுவாளாக இருக்கலாம் என தெரிவித்தார்
Next Story