ரெயிலில் கஞ்சா கடத்தல்: மேலும் ஒருவர் கைது

ரெயிலில் கஞ்சா கடத்தல்: மேலும் ஒருவர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சேலம் வழியாக சென்ற திப்ருகர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த திருப்பூர் மாவட்டம் காந்திநகர் அருகே உள்ள சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த கோபி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே இந்த கஞ்சா கடத்தலில் தொடர்புடைய சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த ராம்பிரபு (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story