சித்தர் பீடத்தில் பங்குனி உத்திரம் சிறப்பு பூஜைகள்

மதுரை தெற்கு வாசல் பகுதியில் சித்தர் பீடத்தில் பங்குனி உத்திரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
மதுரை தெற்குவெளி வீதி பாண்டிய விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஶ்ரீலஶ்ரீ முருகையா சுவாமிகள் சித்தர் பீடத்தில் பங்குனி உத்திரம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு இன்று (ஏப்.12) நண்பகலில் பாணார் சங்க நிர்வாகியான வில்லாபுரத்தை சேர்ந்த டெய்லர் பாலமுருகன் குடும்பத்தினர் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story