சுரங்க பாதை அமைக்க எம்.பி நேரில் ஆய்வு

மதுரை உசிலம்பட்டி அருகே சுரங்க பாதை அமைக்க தேனி எம்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி தெற்கு ஒன்றியம் எஸ் குளம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று, அப்பகுதியினை இன்று (ஏப்.12) தேனி எம்.பி தங்க தமிழ் செல்வன் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அப் பகுதி மக்களிடம் வாக்குறுதி அளித்தார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இருந்தனர்.
Next Story