திமுகவினரின் ஆலோசனை கூட்டம்

மதுரை பசுமலை தனியார் திருமண மண்டபத்தில் திமுகவினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர் மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் தொகுதி பார்வையாளர்கள் முன்னிலையில் (இன்று ஏப்.12) திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை கோபால்சாமி மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் செயல்படும் WhatsApp சேனலில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது . இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story