தென்காசியில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்த போலீசார்

தென்காசியில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்த போலீசார்
X
சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்த போலீசார்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து நேற்று சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும் வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் எதுவும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும் சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமாற உறுதி ஏற்கிறேன், என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Next Story