நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆண் சடலம் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டது.......

காவல்துறை விசாரணை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆண் சடலம் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டது....... நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை மலைச்சரிவில் மரிக்கோடு ஆதிவாசி கிராமத்திற்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆண் சடலம் எலும்பு கூடாக இருப்பது குறித்து தகவல் கிடைத்தவுடன் குன்னூர் வனத்துறை மற்றும் காவல் துறையினர் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் எலும்பு கூடாக இருக்கும் ஆண் சடலம் உயிரிழந்து மூன்று மாதத்திற்கு மேல் இருக்கும் என தெரிகிறது. வனவிலங்கு தாக்குதலில்தான் சம்பந்தப்பட்ட நபர் உயிர் இழந்திருக்க கூடும்.என சந்தேகிக்கப்படுகிறது.அடர்ந்த வனப் பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள நிலையில் குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் போலீசார், வனத்துறை,வருவாய்த் துறையினர் இணைந்து இன்று சம்பவ இடத்திற்கு சென்று அந்த இடத்திலேயே இறந்து கிடந்த சடலத்திற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்க முடிவு செய்து உள்ளனர். அதன் பின்னர் இப்பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் காணாமல் போனவர்கள் குறித்து தகவல்கள் சேகரித்து அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட பின்னர்தான் இறந்தவரின் முழு விவரம் தெரியவரும். இதற்கான முயற்சிகளில் காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story