குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை
X
குற்றாலநாத சுவாமி கோயிலில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாத சுவாமி கோயில் சித்திரை விஷு திருவிழாவில், அருள்மிகு நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இக் கோயிலில் சித்திரை விஷு திருவிழா, ஏப்.5 ஆம் தேதி தொடங்கியது. விழாவில் 11ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அருள்மிகு நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு கோயில் உள்மண்டபத்தில் அருள்மிகு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கோயில் அறங்காவலா் வீரபாண்டியன், சாலுக்குட்டி பாண்டியன், குத்தாலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழாவில் ஏப்.14 ஆம் தேதி காலை 9.20க்கு மேல் 10.20க்குள் சித்திரை விஷு தீா்த்தவாரி நடைபெறுகிறது. சித்திர சபையில் திருப்பணி வேலை தொடங்கி பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், சுவாமி வீதியுலா கோயில் உள்மண்டபத்தில் மட்டுமே நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆறுமுகம் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
Next Story