கோவை: சாய்பாபா கோவிலில் திருமாவளவன் சாமி தரிசனம் !

கோவை: சாய்பாபா கோவிலில் திருமாவளவன் சாமி தரிசனம் !
X
சாய்பாபா காலனியில் அமைந்துள்ள நாக சாயி சாய்பாபா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக திருமாவளவன் வருகை தந்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேற்று கோவைக்கு வருகை தந்தார். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து மதியம் கோவை வந்த அவருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர், சாய்பாபா காலனியில் அமைந்துள்ள நாக சாயி சாய்பாபா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக திருமாவளவன் வருகை தந்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது. இரவு உணவை கோவில் வளாகத்திலேயே அருந்திய பின்னர், அவர் சென்னை புறப்படுவதற்காக கோவை விமான நிலையத்திற்கு சென்றார்.
Next Story