கோவை: சொத்துக்காக மனைவி, மகன்கள் கொலைவெறி தாக்குதல் !

X
கோவை, கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு மெட்டுவாவி கிராமத்தில் சொத்துக்காக மனைவி மற்றும் மகன்கள் இணைந்து கணவர் குப்புசாமி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள அதிர்ச்சியூட்டும் செல்போன் வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பொள்ளாச்சி அருகே உள்ள மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமிக்கும் அவரது மனைவி மற்றும் மகன்களுக்கும் இடையே சொத்துப் பிரிப்பது தொடர்பாக நீண்ட காலமாக தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், இந்த சொத்து தகராறு முற்றிய நிலையில், மனைவி மற்றும் மகன்கள் ஒன்று சேர்ந்து குப்புசாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் குப்புசாமி பலத்த காயமடைந்துள்ளார். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான குப்புசாமி இதுகுறித்து நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் அளித்தும் போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறையின் மெத்தனப் போக்கிற்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
Next Story

