திட்டச்சேரியில் நடந்த பொது விநியோகத் திட்ட மக்கள் தொடர்பு முகாமில்

திட்டச்சேரியில் நடந்த பொது விநியோகத் திட்ட மக்கள் தொடர்பு முகாமில்
X
பொதுமக்களின் 184 மனுக்களுக்கு உடனடி தீர்வு
நாகை மாவட்டம் திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சுற்றறிக்கையின்படி, நாகை மாவட்ட, வட்ட வழங்கல் பிரிவின் சார்பில் பொது விநியோகத் திட்ட மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் ரகு தலைமை வகித்தார். முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், கடை மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை விண்ணப்பம், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உட்பட 12 வகையான கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. முகாமில், திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் 184 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது. தீர்வு நகலை பொதுமக்களுக்கு பேரூராட்சி உறுப்பினர் முகமது சுல்தான் வழங்கினார். முகாமில், முதல் நிலை வருவாய் ஆய்வாளர்கள் இந்திரா, தமிழ்ச்செல்வன், வட்ட வழங்கல் பொறியாளர் மணிகண்டன், கிராம பணியாளர் குமுதவல்லி, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் ஹமீது ஜெகபர், இளஞ்செழியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story