புன்னை கிராமம் அருகே நாய் கடித்து புள்ளிமான் பலி!

X
ராணிப்பேட்டை மாவட்டம் புன்னை கிராமம் மின்வாரிய அலுவலகம் பின்புறத்தில் நேற்று புள்ளிமான் ஒன்று நாய் கடித்து இறந்த நிலையில் கிடந்தது. வனத்துறையினர், கால்நடைத்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி நேரில் வந்து பார்வையிட்டார் .கால்நடைத்துறையினர் மானை பிரேத பரிசோதனை செய்து பின் தீ வைத்து எரித்தனர்.
Next Story

