அங்கன்வாடி மையம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

X
கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட, இலவுவிளை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் 121 - ல் உள்ள பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் ஆகியோர் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று பழுதடைந்து காணப்பட்ட அங்கன்வாடி மையம் 121 - ன் கட்டிடத்தை அகற்றி, புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ. 14.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து பணிகள் முடிவடைந்ததையடுத்து அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் குழந்தைகள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் டெல்மா, ஜெயராணி, மகிளா காங்கிரஸ் நிர்வாகி புஷ்பம் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் பணியாளர், குழந்தைகள், பெற்றோர்கள், கஉட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

