குமரி கண்ணாடி பாலம் பராமரிப்பு பணி

X
கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் இணைக்க கடலின் நடுவே கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பார்வையிடுவதற்காக வருகை தரும் வெளிநாட்டு, வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்கமாக கன்னியாகுமரியில் சீசன் அல்லாத காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு சீசன் அல்லாத காலமான ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.இந்த நிலையில் இந்த பாலத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பாலத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நடை பாலம் கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை ரைட்ஸ் நிறுவனம் என்ற மத்திய பொதுத்துறை நிறுவனம், தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளன. ஆகவே இந்த 5 நாட்களும் கண்ணாடி பாலத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Next Story

