புதுகை: ஜல்லிக்கட்டில் மாடுகுத்தி ஒருவர் உயிரிழப்பு!

X

விபத்து செய்திகள்
மழையூர் அருகே மீனம்பட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 600 காளைகளும் 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்து வருகின்றனர். இந்நிலையில், பொற்பனை கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (23) போட்டியின்போது மாடு குத்தியதில் பலத்த காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story