கிராம ஊழியர் சங்கத்தினர் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு

கிராம ஊழியர் சங்கத்தினர் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு
X
கிராம ஊழியர் சங்கத்தினர் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர் ஒரு பகுதியாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்களிடம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவினை தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சேகர், பொருளாளர் சரவணன், மணிகண்டன், அசோக்குமார், குணசேகர் சண்முகம், பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் வாங்கினார்கள் பணியோடு மக்களின் அங்கமாக திகழும் கிராம உதவியாளர்களின் நீண்ட நாள் துயரைப் போக்கிட தாங்கள் மூலமாக எங்களின் வாழ்க்கை மேம்பட உதவிடும் வகையில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் நாங்கள் பெறுவதற்கு அரசுடன் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 15000 கிராம உதவியாளர்களின் குடும்பங்களின் சார்பாகவும் நமது திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் பயனிக்கும் எங்களின் சார்பாகவும் பணிவோடு வேண்டுகிறோம். தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்
Next Story