தீயினால் உடைமைகளை இழந்த மூதாட்டிக்கு எம்எல்ஏ ஆறுதல்
திருச்செங்கோடு நகராட்சி சீத்தாராம் பாளையம் துப்புரவு தொழிலாளர் காலனி அருகில் உள்ள தட்டாம்பிள்ளை மேடு சமையல் செய்து கொண்டிருந்த புஷ்பா என்பவரின் வீட்டில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது திடீர் தீயினால் வீடு முற்றிலும் அதிர்ஷ்டவசமாக புஷ்பா அவர்களுக்கு எவ்வித காயங்கள் இன்றி உயிர் தப்பினார் தகவல் அறிந்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார் பின்னர் புஷ்பா அவர்களுக்கு அரசினால் கிடைக்கும் உதவிகளை கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் தற்பொழுது எம் எல் ஏ அவர்களின் சொந்த நிவாரண நிதி ரூ.10,000 வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் நகர செயலாளர் சேன்யோ குமார் ஒண்ணாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நந்தகுமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்
Next Story



