சுசீந்திரம் :கோவில் கொள்ளை முயற்சி

X
சுசீந்திரம் அருகே உள்ள புது கிராமத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இது பழமையான கோவில் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் உள்ள பக்தர்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்தக் கோவிலை மன்னர் காலத்தில் கட்டியதாக கூறப்படுகிறது. நேற்று மாலையில் கோவில் பூஜைகளை செய்து விட்டு கோவில் பூஜாரி பிரதீ ப் நம்பூதிரி (40) கோவில் கதவை அடைத்து சென்றுவிட்டார். இன்று அதிகாலை கோவில் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளேசென்று, இரண்டாவது கதவு பூட்டையும் உடைத்து உள்ளனர். பின்பு கருவறை பூட்டை உடைக்க முடியாத காரணத்தினால் அங்கும் இங்கும் சுற்றி பார்த்துவிட்டு கோவிலில் இருந்த சிசிடி கேமராவையும் உடைத்து விட்டு ஏதும் கிடைக்காததால் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இந்த பதிவுகள் சிசிடி கேமராவில் பதிந்துள்ளது. சம்பவம் அறிந்ததும் கன்னியாகுமாரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
Next Story

