அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி மூன்று பேர் காயம்

அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி மூன்று பேர் காயம்
X
உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து மூன்று பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி, தடம் எண்:89எப், எண் கொண்ட அரசு பேருந்து, நேற்று, காலை 10:30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை உயர்மட்ட பாலத்தின் மீது வந்தபோது, எதிரே வந்த ஆட்டோவும் அரசு பேருந்தும் மோதிக் கொண்டது. இதில், பேருந்தின் ஒரு பக்கமும், ஆட்டோவின் பெரும்பகுதியும் சேதமானது. இதில், ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தமன், திருநங்கை மீனா, வளத்தோட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் ,45, ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர். மாகரல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் இருந்த பயணியர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து, மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story