பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்வு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி.

X
Paramathi Velur King 24x7 |13 April 2025 7:23 PM ISTபிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலைஉயர்வு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர், ஏப்.13: பரமத்தி வேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம்,கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள் ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு, வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச்சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்து செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங் களும், 1, 400 அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,440 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,440 வரை யிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத் திற்கு 3 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங் களும், 1, 400 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,480 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,500 வரையிலும் ஏலம் போனது. வரத்து குறைந்த தால் வெல்லம் விலை உயர்வடைந்து உள்ளதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். வெல்லம் விலை உயர்ந்த தால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
