ரோஜாபூங்காவில் சுற்றுலா பயணிகள் குதுகலம் சுற்றுலா பயணிகளால் களை கட்டிய சுற்றுலா தளங்கள்
மனதை மயக்கும் இதமான காலநிலை பல வண்ணமலர்கள் பச்சை புல்வெளிகள் ரோஜாபூங்காவில் சுற்றுலா பயணிகள் குதுகலம் சுற்றுலா பயணிகளால் களை கட்டிய சுற்றுலா தளங்கள் நீலகிாி மாவட்டத்தில் கோடை சீசன் காரணமாக கடந்த இரு மாதங்களாக சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஊட்டியில் தங்கி இங்குள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். தமிழ் புத்தாண்டு மற்றும்வார விடுமுறையையொட்டி சுற்றுலாபயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா போன்ற சுற்றுலாத்தலங்களில் குவிந்துள்ளனர் ஊட்டியில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துவருகிறது . இதனால், பெரும்பாலான தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜ்கள் மே மாதம் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக. காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சேரிங்கிராஸ்,கமர்சியல் சாலை,ரோஜா பூங்கா சாலைகளில் அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்தனர்.
Next Story



