தா.பழூரில் மாணவரணி உறுப்பினர் சேர்த்தல் முகாம்

X
அரியலூர், ஏப்.13- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில்,கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி,இளைஞரணி செயலாளர்,மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,மாவட்ட கழக செயலாளர்,மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி,மாணவரணி உறுப்பினர் சேர்த்தல் முகாமினை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.ஆர்.இராமராஜன்,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில், ஒன்றிய கழக செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர்என்.ஆர்.இராமதுரை,பொருளாளர் த.நாகராஜன்,ஒன்றிய துணை செயலாளர்கள் இந்துமதி நடராஜன், அ.இராஜேந்திரன்,மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன்,சி.கண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ந.கார்த்திகைகுமரன், த.சம்பந்தம், அ.தங்கபிரகாசம்,எழிலரசி அர்ச்சுனன், தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
Next Story

