கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்
X
பால்வண்ணநாத சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால் வண்ண நாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலின் துணைக்கோவிலான இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பிரமோற்சவ விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும், இரவு சுவாமி,அம்பாள் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பதினோராம் திருநாள் நேற்று காலை சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் கரிவலம்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Next Story