கோவை: புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட கோவை குற்றாலம் !

கோவை: புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட கோவை குற்றாலம் !
X
புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட குற்றாலத்தில், ஒரே நாளில் 4500 பேர் அருவியில் ஆனந்த குளியல்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவை குற்றாலம் அருவி, சாலை பராமரிப்பு பணிகளுக்காக நான்கு நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சுமார் 4,500 சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்தி அருவியில் ஆனந்தமாக குளித்தனர். சீரமைப்பு பணிகளுக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட சூழல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மிதமான அருவி நீரில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோடை வெயில் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கோவை குற்றாலத்தை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். கடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட்டிருப்பது உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Next Story