அரசின் பல்வேறு திட்டங்களால் அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்.

X
அரியலூர், ஏப்.13- அரியலூர் மாவட்டம் வாலாஜா நகர் கிராமத்தில் உள்ள ஈவேரா பெரியார் அரசு நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது இவ்விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு மறைந்த பள்ளியின் ஆசிரியர் கலையரசியின் குடும்பத்தினரால் கட்டப்பட்ட பள்ளிக்கான கலையரங்கத்தை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார் பின்னர் நடைபெற்ற விழாவில் இவ்வாண்டு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் மேலும் பள்ளிக்கு 100% வருகை தந்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார் நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஒரு மனிதன் 100 ஆண்டு வாழ்வதே சிரமம் ஆனால் ஒரு பள்ளி நூற்றாண்டை கடந்துள்ளது என்றால் அது எத்தனை பேரை உருவாக்கி இருக்கும் எவ்வளவு பேர் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு காரணமாக இருந்திருக்கும் என்பதை நினைக்கின்ற போது பிரமிப்பாக உள்ளது அரியலூரிலே பள்ளி இறந்த போது வாலாஜா நகரத்திலும் நூற்றாண்டுக்கு முன்பு பள்ளி தொடங்கப்பட்டுள்ளது இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கல்வியின் பால் எவ்வளவு ஈடுபாடு இருந்திருக்கும் என என்ற அக்கறை வெளிப்படுகிறது. தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் தமிழ் சமூகம் எல்லோருக்கும் கல்வி கிடைக்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்காது அனைத்து மாநிலங்களிலும் கல்வி கிடைக்கிறது ஆனால் முன்னேறிய சமூகத்திற்கு மாத்திரம் கிடைக்கிறது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி கிடைப்பதில் இன்னமும் தடையாக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அதில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக இருக்கிறது அதனை 52 சதவீதமாக உயர்த்த முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார் ஆனால் தமிழ்நாட்டில் அப்பொழுதே 52% பேர் உயர்கல்வி படிப்பவர்களாக இருந்தனர். மேலும் தற்போது நமது முதலமைச்சர் கொண்டுவந்துள்ள புதுமைப்பெண் மற்றும் நான் முதல்வன் திட்டங்களின் மூலம் உயர் கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்திற்கும் மேல் தாண்டி உள்ளது எனவே அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு புதுமைப்பெண் நான் முதல்வன் உள்ளிட்ட மகத்தான திட்டங்களால் அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்து வருகிறது நமது முதலமைச்சர் கூறுவது போல் அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என்பார் அது நிலை நாட்டுகின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது எனவே இந்த பகுதியில் கல்வி சேவை வழங்கி வரும் இப்பள்ளி மென்மேலும் வளரவும் இதில் பணிபுரியும் ஆசிரியர்கள் கிராம மக்கள் அனைவரும் இதற்கு ஒரு துணையாக இருக்க வேண்டும் எனவும் பேசினார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா மற்றும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் இன்னால் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story

