குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
X
ஊர்வலம்
திருக்கோவிலுார், நல்லாயன் தேவாலயம் சார்பில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. இயேசுபிரான் ஜெருசலேம் நகருக்குள் வெற்றியோடு, நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் குருத்தோலை ஞாயிறு தினத்தன்று அனுசரிக்கின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலுார், பஸ் நிலையம் அருகே உள்ள நல்லாயன் தேவாலயம் சார்பில், அலெக்ஸ் மற்றும் பங்கு தந்தை கிளிட்டஸ் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள், பெண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து குருத்தோலையை கையில் ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர்.
Next Story