களத்தூர்:தெருவின் நடுவில் மின்கம்பம் அகற்றாமல் சாலை அமைப்பு

X
காவேரிப்பாக்கம் ஒன்றியம் களத்தூர் கிராமத்தில் இருளர் காலனி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தெருவில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக பேவர் பிளாக் சாலை போடப்பட்டது. இப்பணியின்போது, சாலையின் நடுவே இருந்த மின்கம் பத்தை அகற்றாமல் அப்படியே பேவர் பிளாக் சாலை அமைத்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மின் கம்பத்தால் இரவில் விபத்து ஏற்படும் அபா யமும் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தெருவின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

