குருவிகுளத்தில் விசிக கட்சி சார்பாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் 135-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சியின் கிஷோர்குமார் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு மேசை, நாற்காலி உள்ளிட்ட 1 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் தொகுதி செயலாளர் பீர் மைதீன்,இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் குட்டி வளவன், சங்கரன்கோவில் நகரத் தொண்டரணி சண்ணா வளவன், சத்திரப்பட்டி கிளைச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் பால்ராஜ், மாரிமுத்து, குட்டியான், தினேஷ், படுகு ராஜா, ராமர், மாதவன்,லட்சுமணன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story

