கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

X
அரியலூர், ஏப்.14- தென் தமிழகத்தின் சின்ன திருப்பதி என அழைக்கப்படும் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் 17-ம் நூண்றாண்டில் கட்டப்பட்ட தென்கலை அமைப்பை சேர்ந்ததாகும். இக்கோயிலின் ஆண்டு பெருவிழா கடந்த ஏப்-6 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோயில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா குடும்பத்தினர் முன்னிலையில் உற்சவர் கலியுக வரதராசப் பெருமாள் மற்றும் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புத்தாடை உடுத்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கலியுக வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், மற்றொரு தேரில் ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் தேரின் வடத்தை இழுத்தனர் அசைந்தாடி வந்த தேரை அங்கிருந்த பக்தர்கள் வணங்கி சாமி தரிசனம் செய்தனர் தேர் திருவிழாவையொட்டி அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Next Story

