நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

X
அரியலூர், ஏப்.14- மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே நாம் தமிழர் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வேண்டும். மத வழிபாட்டு உரிமையில் தலையிடக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதுஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மண்டலச் செயலர் சண்முகம் தலைமை வகித்து, கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலர் கப்பல்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
Next Story

