கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு
தமிழ்நாட்டில் உள்ள மீனவ கிராமங்களில், இன்று (15 -ம் தேதி) முதல் வருகிற ஜூன் மாதம் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், வங்காள விரிகுடா, பாக் நீர் சந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் வாழும், கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வருவதால், இம்மாதங்களில் இப்பகுதிகளில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன் பிடிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள உள்ள ஒரு செய்தி குறிப்பில், மீன்பிடி தடை காலத்திற்கு முன், விசைப்படகு மீனவர்கள் இன்று (15 -ம் தேதி) நள்ளிரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் 1500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது. மீன் பிடித் தடைக்காலம் காரணமாக, வருகிற 16-ம் தேதிக்கு பிறகு துறைமுகம் மற்றும் மீன் சந்தைகள் வெறிச்சோடி காணப்படும். இதனால், மீன் பிரியர்களின் மீன்களின் மீதான ஆசை கேள்விக்குறியாகும். மீன் பிரியர்கள் தங்கள் மீன் மற்றும் கடல் உணவுகள் மீதான ஆசையை நிறைவேற்றி கொள்ள, 60 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பைபர் படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படவில்லை. பைபர் படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் சந்தைக்கு விற்பனைக்கு வராது. அவை மீனவர்களின் அன்றாட மீன் தேவைக்கு போதுமானதாக இருக்கும்.
Next Story




