திமுக ஆட்சி தமிழகத்திலிருந்து அகற்றப்படும்

திமுக ஆட்சி தமிழகத்திலிருந்து அகற்றப்படும்
X
நைனார் நாகேந்திரன் பேட்டி
தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் இன்று கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது,இத்தமிழர் திருநாளில், தமிழ் புத்தாண்டில் தமிழர்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும், அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தமிழ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சி மாற்றப்பட்டு, என்.டி.ஏ. தலைமையில் புதிய ஆட்சி அமையவேண்டும் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆட்சியில் பாலியல் வன் கொடுமை, மது போதை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வெட்டு குத்து கொலை என நடக்கிறது. இதிலிருந்து மாற்றம் வரவேண்டும். என்.டி.ஏ., தலைமையிலான கைட்டணி அண்ணன் இ.பி.எஸ்., தலைமையில் பெரும்பான்மையான வெற்றி பெறும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Next Story