அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
X
சட்ட மேதை அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியுடன் மாலை அனைத்தும் மரியாதை செலுத்தினர்.
அரியலூர், ஏப். 14: சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பு, கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, மதிமுக மாவட்டச் செயலர் ராமநாதன்,அரியலூர் வடக்கு ஒன்றியச் செயலர் சங்கர், அதிமுக சார்பில் மாவட்டச் செயலர் தாமரை எஸ்.ராஜேந்திரன், திமுக சார்பில் நகரச் செயலர் முருகேசன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் டி.தண்டபாணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் து.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் நகரத் தலைவர் மா.மு.சிவகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் அங்கனூர் சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை, ஆண்டிமடம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அமைப்பு மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். :
Next Story