வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி

தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
வக்பு திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அச்சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும் நாகை அவுரிதிடலில், நேற்று முன்தினம் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை சார்பில் மாவட்ட கௌரவ தலைவர் மௌலவி எஸ்.எச்.முகம்மது இஸ்ஹாக் பாகவி தலைமையில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா கண்டித்து பேசினார். கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி, நாகை எம்.பி வை.செல்வராஜ், திமுக மாவட்டச் செயலாளர் என்.கௌதமன், கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ வி.பி.நாகைமாலி, முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே.நிஜாமுதீன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர் ஏ.ஆர்.நௌஷாத், தமிழ்நாடு காங்கிரஸ் என்ஜிஓ பிரிவு மாநிலத் தலைவர் ராஜதுரை, நாகூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.சர்புதீன் மரைக்காயர், ஜமாத்துல் உலமா சபை முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் மௌலவி எஸ்.மக்சூது சாகிப் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாத்களின் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story