மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

X
அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளினை முன்னிட்டு, இன்றையதினம் (14.04.2025) முதல்வர் ஸ்டாலின் கானொலி காட்சி வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில் நடைபெற்ற ”சமத்துவ நாள்" விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, காரைக்குடி மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆனந்தி, 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஹரிதாஸ் துரைராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story

