தொழிலதிபர் வீட்டில் கார் - ஆவணங்கள் திருட்டு

X
தக்கலை அருகே உள்ள இரவிபுதூர் கடை பகுதியை சேர்ந்தவர் அசார் (35) இவர் நெல்லை மாவட்டத்தில் கல்குவாரி நடத்தி வருகிறார். குமரியில் வெள்ளமடம் பகுதியை சேர்ந்த அருண் முத்து ( 36) என்பவர் கணக்கு பார்க்கும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அருண் முத்து சரிவர கணக்குகளை பார்க்காமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து அருண் முத்துவிடம் அசார் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவிபுதூர் கடையில் உள்ள அசாரின் வீட்டிலிருந்து ரூபாய் 58 லட்சம் மதிப்புடைய கார், கம்பெனி ஆவணங்கள், வங்கி காசோலை, அலுவலக சாவி ஆகியவற்றை அருண் முத்து திருடி சென்றதாக தக்கலை போலீசில் அசார் புகார் அளித்தார். புகாரின் பேரில் அருண் முத்து மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

