சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கட்சி அலுவலகத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135 - வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமை வகித்து, அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம்,அயலக அணி மாவட்ட துணை தலைவர் விஜய கணபதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல், இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரம் கடை தெருவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வளவன் தலைமையில், அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஒன்றிய நிர்வாகிகள் செந்தமிழன், கணேஷ் பாட்ஷா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



